மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
சென்னை பூவிருந்தவல்லி அருகே மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜன் சென்னையை அடுத்த கரையாஞ்ச்சாவடியில் உள்ள மத்திய ரிசர்வ் படை 77வது பட்டாலியனில் துணை கமாண்டர் ஆக பணியாற்றி வந்தார்.
இன்று காலையில் வழக்கம்போல் பணிக்கு சென்ற ஸ்ரீஜன் தனது அறைக்கு சென்று சிறிது நேரத்திலேயே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அங்கு பணியில் இருந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீஜன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார்.
அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஸ்ரீஜன் அலுவலக அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது சொந்தப் பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.







