எரிசக்தி உற்பத்தியில் தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும்.!
எரிசக்தி உற்பத்தியில் தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உலக சூரியசக்தி தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் உரையை மத்திய மின் துறை அமைச்சர் ஆர் கே சிங் வாதிட்டார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி 134 ஜிகா வட்டாக இருப்பதாகவும் மொத்த மின்சார உற்பத்தியில் இது 35% என்றும் பிரதமர் கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு இது 220 ஜிகாவாட் ஆக உயரும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.







