--- --:--:-- --

பழனியில் சுற்றுச்சுவரில் ஹிந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்ட வாசகம்..!

2

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரில் விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்ததாக திராவிடர் கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தினர் சார்பில் அரசு மருத்துவமனை சுற்றுச் சுவரில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

 

அதில் ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்த நிலையில் விதிமுறைகளை மீறி சுவரில் எழுதியதாக கூறி திராவிடர் கழக மாவட்டத் தலைவர், நகர தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon