--- --:--:-- --

திருவாடானையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் நடைபெற்ற முகாம்..!

1.3

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மத்திய அரசின் பிரதமர் போசன் மா என்ற திட்டத்தின்படியும். தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை இணைந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தான உணவுகள் வழங்கிட ஊட்டச்சத்து உணவுகள் பற்றி அதை வைத்து முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சத்தான பயறு வகைகள் சத்தான மாவு வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், போன்ற சத்தான உணவு பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியா ராமு, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி செங்கை ராஜன், துணை தலைவர் மகாலிங்கம் மற்றும் ஊட்டச்சத்து குழந்தைகள் திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon