--- --:--:-- --

கோவையில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய முயன்றவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது !!!

0.1

கோவை காரமடை பெள்ளாதி பகுதியில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய முயன்ற கூலித்தொழிலாளியை சைல்டு லைன் அமைப்பின் புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

கோவை மாவட்டம் காரமடை பெள்ளாதி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. எட்டாம் வகுப்பு படித்து வந்த இவர் கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

 

இந்நிலையில் அதே பகுதியைச்சேர்ந்த கூலி தொழிலாளியான 26 வயது சிவலிங்கம் என்பவர் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

 

இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.இது பெற்றோர்களுக்கு தெரிய வர அவர்கள் சிவலிங்கத்துடன் சிறுமிக்கு வரும் 21ம் தேதி திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருந்தனர்.

 

குழந்தை திருமணம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சைல்டு லைன் அமைப்பினர் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ சோதனை மேற்கொண்டனர்.இதில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய சிவலிங்கத்தை சைல்ட் லைன் அமைப்பு நிர்வாகி ஏஞ்சலின் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் அவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

நாளுக்கு நாள் கோவையில் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி கர்ப்பமாவது அதிகரித்து வருகிறது. இச்சூழ்நிலையில் குழந்தைகளை யாருடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிப்பதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

 

கோவையில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய முயன்றவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon