இறுதிக்கட்டத்தை எட்டிய மேம்பால பணிகள்
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மூன்றாண்டுகளுக்கு முன்பு மேம்பால பணிகள் தொடங்கப்பட்டது.குரங்கு சாவடியில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கும் ,ஐந்து ரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கும் இணைக்கும் கட்டுமான பணிகள் தற்போது நிறைவு பெறும் தருணத்தில் உள்ளது.
அதே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மேம்பாலம் பணியான ஐந்து ரோடு முதல் அஸ்தம்பட்டி இணைக்கும் மேம்பாலப் பணி நிறைவு பெற்று அதில் தற்போது வாகனங்களும் சொல்லப்படுகிறது.
மீதமுள்ள இரண்டு மேம்பாலங்களின் கட்டுமான பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.அந்த இரண்டு மேம்பாலங்களும் இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






