இளமை… இதோ… இதோ பாடலை பாடிய இளையராஜா..!
இசையமைப்பாளர் இளையராஜா பாடல் பாடி புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை வரவேற்கும் பாடலான இளமை இதோ இதோ என்ற பாடலை பாடி இளையராஜா அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வருடங்கள் ஓடினாலும் தனக்கும் தன் இசைக்கும் என்னைக்குமே மூப்பு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகும் அதே துள்ளலோடு புத்தாண்டு பாடல் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் இளையராஜா. பாடலின் இறுதியில் இது எப்படி இருக்கு என்று கேட்பது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.





