லோக்சபாவில் பேச அனுமதிப்பதில்லை: ராகுல்
லோக்சபாவில் தனக்கு பேச அனுமதி தரப்படுவதில்லை என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் லோக்சபாவில் பேச தனக்கு உரிமை உண்டு.
ஆனால் தனக்கு ஒருபோதும் அனுமதி தரப்படுவதில்லை என்று கூறினார். அதேநேரத்தில் பாதுகாப்பு அமைச்சர், பாஜக எம்பிக்களுக்கு மட்டும் பேச அனுமதி தரப்படுகிறது என்றும் அவர் சாடினார்.



