--- --:--:-- --

தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் இருக்கானு தெரில…ஆனா குரூப்பிசம் இருக்கு..!

3.1

முன்னணி திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜனின் சமீபத்திய டுவிட்டர் பதிவில் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

 

அவர் தன்னுடைய பதிவில் திரைத்துறையை சேர்ந்தவர்களின் குடும்பங்களை மட்டுமே வளர்த்துவிடும் நெப்போடிசம் பழக்கம் தமிழ் சினிமாவில் இருக்குதா இல்லையா என தெரியவில்லை. ஆனால் குரூப்பிசம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

 

மேலும் யாருக்கு என்ன கிடைக்கனும் என்பதை யாரோ நிர்ணயிக்குறாங்க… யாருங்க நீங்க என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரம் சுஷாந்த் சிங் தற்கொலையின் போது நெப்போடிசம் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு நிலையில் தற்போது குரூப்பிசம் என்ற பிரச்சனை தமிழ் சினிமாவில் இருப்பதாக நாட்டை வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon