ஆள் கடத்தல்.. பண மோசடி.. பரிதாபமாக சிக்கிய மருத்துவர்..!
சிபிஐ அதிகாரி எனக் கூறிய அரசு மருத்துவரிடம் 36 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த அரசு மருத்துவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை சிபிஐ அதிகாரி எனக் கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார். மருத்துவமனையில் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதாகவும் அந்த சிம் கார்டுகள் மூலம் ஆள் கடத்தல் மற்றும் பல மோசடிகள் அரங்கேற்றபட்டிருப்பதாக கூறியவர், விசாரணைக்கு மருத்துவரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பெற்று 36 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது.





