--- --:--:-- --

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் எப்படி உள்ளது? – அமைச்சர் துரைமுருகன்

1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

 

இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் ஆகியோர் உடன் சென்றனர்.

 

இந்நிலையில், முதலமைச்சர் நலமுடன் உள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார். அவர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார்.” என்று விளக்கமளித்துள்ளார்.

Right Menu Icon