சிகரங்கள் அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் ரத்ததான முகாம்!
திருப்பூர் வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் ரோட்டரி திருப்பூர் வஞ்சிபாளையம் உடன் இணைந்து, வஞ்சிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 92 வது ரத்த தான முகாம் நடைபெற்றது.
முகாமில், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் கலந்து கொண்ட மருத்துவக் குழுவிற்கு 56 யூனிட் பொதுமக்களிடமிருந்து தானமாக பெறப்பட்டு கொடுக்கப்பட்டது. மேலும் ஐ பவுண்டேஷன் திருப்பூர் சார்பில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை நடைபெற்றது. இதில், 165 பேர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாம் வாயிலாக, 10 பேருக்கு குறைபாடுகள் கண்டறிந்து உடனடியாக இலவச அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரேவதி மெடிக்கல் சென்டர் சார்பில் பொது மருத்துவ முகாமும், இலவச இசிஜி மற்றும் பல் பரிசோதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் சிகரங்கள் அறக்கட்டளை மற்றும் நண்பர்கள குழு அறக்கட்டளை மற்றும் ரோட்டரி திருப்பூர் வஞ்சிபாளையம் சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மற்றும் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




