திருவாடானையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்ற மறந்த அரசு அலுவலகங்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் தலைமையிடமாக உள்ளது. அதனால் இங்கே அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள நிலையில் இன்று நாடெங்கும் 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடி வரும் வேளையில் 74 வது சுதந்திர தினத்தையும் மறந்து தேசியக்கொடி ஏற்ற மறந்த அலுவலகங்களும், அலுவலகங்களும் உண்டு என்பது தான் வேதனை.அந்த அடிப்படையில் சார்நிலை கருவூலம் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்ற வில்லை.
கடந்த காலங்களில் இதுகுறித்து பலமுறை சமூக ஆர்வலர்கள் அரசுக்கு புகார் தெரிவித்ததை தொடர்ந்து அரசு விழாக்களில் தேசிய கொடி ஏற்றாத பட்சத்தில் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் கடந்த வருடம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் சார்நிலை கருவூலத்தில் இன்று தேசியக் கொடியை ஏற்றவில்லை. இந்த அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்ற கம்பம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வட்டார புள்ளியல் துறை அலுவலகத்திலும், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகத்திலும், ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கியிலும், தமிழ்நாடு அரசு கிராம வங்கியில தேசியக்கொடி ஏற்றவில்லை. இந்த அலுவலகங்களில் பணிபுரியும் இது போன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.






