கோர விபத்து.. மாணவர்கள் 15 பேர் பலியான சோகம்!
மலேசியாவில் நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெரிக் என்ற இடத்தில் கிழக்கு-மேற்கு தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் சென்ற பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வேன் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
படுகாயங்களுடன் 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். துயர சம்பவத்துக்கு மலேசிய பிரதமர் அன்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.






