--- --:--:-- --

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!

5

க்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையையொட்டி தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.

 

இதனால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தளங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை வேலை நாள் என்பதால் திங்கள்கிழமை இரவு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வேண்டும்.

 

மேலும் பேருந்து ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். எனவே செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. சொந்த ஊர் மக்களுக்காக நடுவில் வெள்ளிக்கிழமை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்தது.

 

Right Menu Icon