--- --:--:-- --

3 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

9.2

காரைக்காலில் சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் மாம்பழங்களின் மூலம் காலரா பரவி இருக்கலாம் என புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லக்ஷ்மிநாராயணன் தெரிவித்துள்ளார். காலரா பாதிப்பு காரணமாக காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

காலரா நோய் தென்பட்டதால் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், காலரா பரவல் மக்கள் பயப்படும் அளவுக்கு இல்லை என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

 

தண்ணீர், கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் இணைப்பு தொட்டி என அனைத்தும் சரி செய்யப்பட்டு வருவதாக கூறியவர் காலராவுக்கு 700 பேர் சிகிச்சை மற்றும் பரிசோதனை பெற்று வீடு திரும்ப உள்ளனர் என கூறினார்.

 

Right Menu Icon