நாளை விடுமுறை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் ரத்து
நாளை கோகுலாஷ்டமி என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-வது வாரத்தில் 48,418 பேரும் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சனிக்கிழமை (ஆக. 23), 38 மாவட்டங்களிலும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.





