--- --:--:-- --

குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று மகாராஷ்டிரா எல்லை மாவட்டங்களில் விடுமுறை..!

2

குஜராத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக மாநில வாக்குப்பதிவு தினத்தன்று மகாராஷ்டிரா எல்லையோர மாவட்ட மக்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் மாநில தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் குஜராத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக எல்லையோர மாவட்ட மக்களுக்கு மகாராஷ்டிரா அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

 

பான்கர், நாசி ஆகிய அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் கட்டாயம் ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

 

Right Menu Icon