மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணை தீவிரம்..!
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஷாரிக் பயன்படுத்திய வாட்சப் எண்ணின் கோவையில் உள்ள ஈஷா சிலையை டிஸ்ப்ளே புகைப்படமாக வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது.
ராஜ் என்ற பெயரில் கைபேசி பயன்படுத்தி வந்த ஷாரிக், கௌரி, அருண்குமார் என்ற பெயரில் கோவையில் உள்ள விடுதியில் தங்கியிருந்திருக்கிறார். இந்நிலையில் ஷாரிக் பயன்படுத்திய வாட்சப் எண்ணில் கோவையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று.
ஈஷாவின் சிலையை டிஸ்ப்ளே புகைப்படமாக வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் ஈஷா சென்று வந்தாரா? அவருடன் வேறு யாரும் அங்கு சென்று வந்தனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை விரிவு படுத்தி இருக்கிறார்கள்.





