பா.ஜ.க உடன் கூட்டணி வைத்த கட்சி வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை – ஜோதிமணி
அ.தி.மு.க-வை அழிக்க வேண்டும் என்கிற பா.ஜ.க-வி கனவு நினைவாகி வருகிறது. நீண்ட காலம் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி, இரண்டுபட்டு நிற்கிறது.
இந்தியாவில் பா.ஜ.க உடன் கூட்டணி வைத்த எந்த கட்சியும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதுவே இன்று அ.தி.மு.க-விற்கு நிகழ்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.





