--- --:--:-- --

ஹிப் ஹாப் தமிழாவின் யூடியூப் சேனல் திடீரென முடக்கம்..!

9

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழாவின் யூடியூப் சேனல் திடீரென மூடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் நடிகரும் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி தற்போது சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹிப்ஹாப் தமிழா யூடியூப் சேனல் தொடங்கினார்.

 

அந்த சேனல் 20 லட்சம் பார்வையாளர்களை கொண்டு வந்த நிலையில் அந்த சேனல் பக்கத்தில் இருந்த அனைத்து வீடியோக்களும் தற்போது அழிக்கப்பட்டதோடு மேலும் அவருடைய யூடியூப் சேனல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. ச

 

மீபத்தில் தான் நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட நிலையில் தற்போது ஹிப் ஹாப் தமிழாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே முடக்கப்பட்ட யூடியூப் சேனலை மீண்டும் கொண்டுவர ஹிப் ஹாப் தமிழா ஆதி முயற்சித்து வருகிறார்.

Leave a Reply

Right Menu Icon