--- --:--:-- --

அதிக பாரத்தால் நடு ரோட்டில் சாய்ந்த லாரி!

13

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரும்பு ஏற்றி சென்ற லாரி பாரம் தாங்க முடியாமல் சாய்ந்து விழுந்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியிலிருந்து சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஜெயங்கொண்டம் வேகத்தடையை கடந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாய்ந்து விழுந்தது.

 

லாரி ஓட்டுநர் சதாசிவம் அவருடைய உதவி ஆய்வாளர் தக்க தருணத்தில் கீழே குதித்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. லாரி சரிந்ததில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon