சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்..!
திருவள்ளூர் அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஜனபஞ்சற்றம் கூட்டுச்சாலையில் பிற்பகலில் சுமார் 3 மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறுவதால் விடிய விடிய பெய்த கனமழை போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக கூறப்படுகின்றன. வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.






