--- --:--:-- --

மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட போதகர்..! 19 வயது மாணவி புகார்..!

7

கோவையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் தனக்கு நன்கு அறிமுகமான போதகரான சாமுவேல் சுந்தர் என்பவர் இன்ஸ்டகிரம் மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து தனக்கு ஆபாச படங்களை அனுப்பியும், பேசியும் தொல்லை செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

 

மேலும் தாம் போத்தனூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆறாம் வகுப்பு படிக்கின்ற போது அங்குள்ள மாணவிகளுக்கு பைபிள் போதனை வகுப்பு எடுப்பதற்கு வந்த போது அறிமுகமான சாமுவேல் என்பவர் அன்றிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை சூழ்நிலைக்கு ஏற்ப தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்த மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

 

அதன்பின் அவரது பழக்கத்தை துண்டித்த நிலையில் முகநூல் மூலமும் அதனைத் தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் மூலமும் சாமுவேல் தொடர்ந்து ஆபாசமாக பேசுதல், ஆபாச படங்களை அனுப்புவது என்று தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

 

இதையடுத்து சாமுவேலை விசாரணைக்கு அழைத்த போலீசார் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பள்ளியில் படிக்கும்போது அத்துமீறி நடந்து கொண்டதற்காக 9 வருடம் கழித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சாமுவேல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

சென்னையில் உள்ள ஸ்கிரிப்டர்ஸ் யூனியன் என்ற கிறிஸ்தவ மத போதக அமைப்பின் மூலம் ஒவ்வொரு பள்ளிக் கூடங்களாக சென்று மத போதனைகளை ஈடுபட்டு வந்த சாமுவேல் ஏற்கனவே வேலூரிலும் இதேபோன்று மாணவிகள் சிலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் போதக அமைப்பிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மாணவிகள் தங்களுக்கு நடக்கின்ற பாலியல் அத்து மீறல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து தங்களது பெற்றோர்கள் மூலமோ அல்லது நேரடியாகவோ புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon