நவம்பர் 25 முதல் கனமழை..4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
தென் கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது என்றும் இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கு கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த இரு தினங்களில் தெற்கு கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும் தாழ்வு மண்டலம் தமிழ்நாடு இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 25 முதல் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.






