ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயியை இழுத்துச் சென்ற புலி..!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீட்டின் முன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயியை புலி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் 82 வயதான விவசாயி கிருஷ்ணன் வழக்கம்போல தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது புலி அவரை இழுத்துச் சென்றுள்ளது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் எழுப்பினர். இறந்தவரின் உடலை போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாக நினைப்பதாக வேதனை தெரிவித்தனர் மக்கள்.
இவற்றை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சுமார் 6 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






