--- --:--:-- --

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை தொடரும்..!

4

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும், கிருஷ்ணகிரி தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதைப்போல நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

 

மன்னார்வளைகுடா அரபிக்கடலில் லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon