--- --:--:-- --

கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரு பெண் பலத்த காயம்..!

3

யிலாடுதுறை அருகே தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரு பெண் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். 2 பேர் காயமடைந்தனர். மயிலாடுதுறை வட்டம் கிராமத்தில் இந்திராநகர் நாகராஜன் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கட்டிடங்களின் தொகுப்பு வீடுகளில் நூற்றுக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

 

25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இந்த சூழலில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த பெண்மணி காயமடைந்தார்.

 

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு 10 தையல் போடப்பட்டுள்ளது. அவரது 2 வயது மகள் லேசான காயமடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் புதிதாக வீடு கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon