--- --:--:-- --

சமூக நீதித் துறை தொடங்கி, 3 முக்கிய துறைகளின் பெயர் மாற்றம்..!

3

மிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க துறைகளின் பெயர்களை மாற்றி வரும் நிலையில், முதற்கட்டமாக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையை சமூக நீதித் துறை என சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றத்துக்கான அரசாணையை தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்டிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து தற்போது, 1978-ம் ஆண்டின் தமிழ்நாடு அரசு அலுவல் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, தலைமைச் செயலகத்தின் மூன்று துறைகளின் பெயர்களை மாநில அரசு மாற்றியமைத்துள்ளது.

 

அதன்படி இதற்கு முன்பு, வணிக வரி மற்றும் பதிவுத் துறை இனி ‘வணிக வரி, பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை’ என்றும், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை இனி ‘திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை’ என்றும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை இனி ‘சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை’ என்றும் அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கடந்த ஜூலை 7-ந் தேதி இதற்கான அரசாணை தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டது. இந்த அரசாணை (GO) மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், அறநிலையங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகள் தொடர்பான பாடப்பிரிவுகளை (துறைகளை) இந்தத் துறைகளுக்கு இடையே மறுஒதுக்கீடும் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பெயரை சமூக நீதித் துறை என மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணை தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.

 

 

கவர்னருடன் முதல்வர் விஜய் குடும்ப உறவோடு பணியாற்றுகிறார். புதுச்சேரி காங்கிரஸ் கூட்டத்தில் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் பேச்சு. தமிழக அரசில் கடந்த 1988-ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை உருவாக்கப்பட்டது. சமூக நலத் துறையிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட இந்த துறை, தமிழக அரசின் முக்கிய துறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

 

 

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) உள்ளிட்டவை துறைகள் இயங்கி வருகின்றன. தற்போது இந்த துறையின் அமைச்சராக வி.சி.க எம்.எல்.ஏ வன்னி அரசு செயல்பட்டு வருகிறார். செயலாளராக டாக்டர் என்.சுப்பையன் பணியாற்றி வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon