டெல்லியில் புழுதிக் காற்றுடன் கனமழை!
கோடை வெயில் கொளுத்தும் டெல்லியில் திடீரென புழுதி காற்றுடன் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. டெல்லியில் கோடை காலம் தொடங்கி வெப்பநிலை 40 டிகிரியை தொட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெரும் வேகத்தில் புழுதி காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாப்பிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளான கில்ஜித் பல்கிஸ்தான், முசாஃபராபாத் உள்ளிட்ட இடங்களில் புழுதிப் புயல் சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.







