--- --:--:-- --

ஆன்லைன் தேர்வை நடத்தக்கூறி மாணவர்கள் போராட்டம்..!

3

துரையில் ஆன்லைன் தேர்வை நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் நேர்முகத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நேற்று முதல் தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் நேற்று மதுரை கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் தேர்வை நடத்த வேண்டும் என கூறி கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி நிர்வாகம் சார்பில் தேர்வுகளை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

 

ஆனால் இதை ஏற்காத மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தொடர்ந்து கல்லூரியிலிருந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon