--- --:--:-- --

ஃப்ரீ பையர் விளையாட்டிற்கு அடிமையான பட்டதாரி இளைஞர் தற்கொலை..!

5

ஃப்ரீ பையர் விளையாட்டிற்கு அடிமையான பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சசிக்குமார் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

 

அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார். சசிக்குமார் செல்போனில் ஃப்ரீபையர் விளையாட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடி வருவதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் அறையில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். நண்பர்கள் வேலை முடிந்து வந்து பார்த்தபோது சசிகுமார் இறந்த நிலையில் இருந்திருக்கிறார். தகவலறிந்து வந்த போலீசார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon