--- --:--:-- --

அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் : தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்

2

போராட்டம் காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு தனியார் பால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எனவே அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சென்னை மாதவரம், கொரட்டூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு ஆவின் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தின் மூலம் பல்வேறு இடங்களில் பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனையாகிறது.

 

இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி முதல் ஆவின் பால் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தனியார் பால் விற்பனை அதிகரிக்கும் எனவும், எனவே பேச்சுவார்த்தை மூலம் அரசு சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon