7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி நூதன போராட்டம்
ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவேந்திரர், பள்ளர், குடும்பர், காலாடி உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கக் கோரி தேவேந்திர சமுதாய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக இதுவரை தமிழக அரசு எந்த வித அறிவிப்புகளும் வெளியிடாததை கண்டித்து நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் மொட்டையடித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரை நிர்வாணத்தோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நிர்வாகிகளை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க போலீசார் அனுமதி வழங்கினர்.





