தமிழக அரசுக்கு டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருது கிடைத்துள்ளது..!
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழக அரசுக்கு டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த ஆண்டு தமிழக அரசு டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருதை பெற்றுள்ளது என்றும் இந்த விருது நேற்று நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா 2020 காணொளி மூலம் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் மத்திய தொலைத்தொடர்பு மின்னணு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் செயலாளர் அஜய் பிரகாஷ் ,டெல்லி தேசிய தகவல் மையத்தின் தலைமை இயக்குனர், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தகவல் தொழில்நுட்பவியல் துறை மற்றும் தமிழ்நாடு தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப இயக்குனர்கள் டாக்டர் எம் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






