--- --:--:-- --

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்திய அரசு கண்டனம்..!

6

பாகிஸ்தானில் வன்முறையாளர்களால் இந்து கோவில் இடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசு பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளது.

 

கரக் நகரிலிருந்த பழமையான கோவில் இடிக்கப்பட்டது மிகவும் கவலையளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானுக்கு தூதரகம் மூலம் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையான இந்து மக்களுக்கு உரிய பாதுகாப்பும் அவர்களின் கலாச்சார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

 

இதனிடையே பாகிஸ்தான் இடிக்கப்பட்ட இந்துக் கோவிலை மாகாண அரசை புதிதாக கட்டி தருவதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பலமுறை அவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon