பிரசவத்திற்காக வந்த பெண்ணை அனுமதிக்காத அரசு மருத்துவமனை! தெருவோரத்தில் குழந்தை பெற்றெடுத்த அவலம்
பிரசவத்திற்காக வந்த பெண்ணை அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் அவர் தெருவோரத்தில் குழந்தை பெற்றெடுத்த அவலம் உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் சென்றுள்ளார்.
அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் அந்தப் பெண்ணை அனுமதிக்காததால் அந்தப் பெண் தெருவோரத்தில் குழந்தையை பெற்றெடுத்தார். கர்ப்பிணியை உரிய நேரத்தில் மருத்துவமனைகள் அனுமதிக்காத மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.





