--- --:--:-- --

ஜியோவில் 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ள கூகுள் நிறுவனம்..!

2

கூகுள் நிறுவனம் ஜியோவில் 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 63 ஆவது வருடாந்திர பொதுக்கூட்டம் கொரோனா பாதிப்பு காரணமாக முதல் முறையாக தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது.

 

அதில் பேசிய முகேஷ் அம்பானி பேஸ்புக் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் ஜியோவில் ஏற்கனவே முதலீடு செய்திருக்கும் நிலையில் கூகுல் நிறுவனம் 33 ஆயிரத்து 737 கோடி ரூபாயை முதலீடு செய்து 7.7 விழுக்காடு பங்குகளை வாங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் விரைவில் தொடங்கும் என்றும் கூறிய முகேஷ் அம்பானி அந்த சேவை உலக தரத்தில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

 

அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் எழுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறினார் என்பது நினைவுகூறத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon