உலக இளைஞர்களின் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் பேச்சு..!
தாங்கள் வளர்த்துக்கொண்ட திறமையை இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். உலக இளைஞர் திறன் நாள் 2020 என்ற நிகழ்ச்சிக்காக காணொலிக் காட்சி மூலமாக பேசிய பிரதமர் நரேந்திரமோடி கொரொனா வேலை செய்யக்கூடிய கலாச்சாரத்தையே மாற்றி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த வகையிலும் விட்டுவிடக் கூடாது என்றும், இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். திறமை என்பது வெறும் பணம் சம்பாதிப்பதற்கான வழி மட்டுமல்ல அது உற்சாகம் அளிக்கக்கூடியது என்று தெரிவித்தார்.
மேலும் திறன் வேலையை வழங்குவதோடு ஊக்கம் மற்றும் செல்வாக்கையும் சேர்த்தே தருகிறது என்று கூறினார். இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக ஏராளமான திறன் வளர் மையங்கள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் இதுவரை ஐந்து கோடிக்கும் மேலான இளைஞர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் பேசினார்.






