--- --:--:-- --

தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

10.1

கேரள தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருப்பது கருப்பு பணம் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி ஜாமீன் மனுவை எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூலை 5ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இது தொடர்பாக ஸ்வப்னா உள்ளிட்டோரை என்‌ஐ‌ஏ அதிகாரிகள் கைது செய்த நிலையில் ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாய் மற்றும் 982 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon