--- --:--:-- --

கோவையில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு.இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 395 பேர் !!!

10.2

கோவையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கடந்த ஒரு வார கால கட்டங்களில் மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 300 ஐ தாண்டி வருகிறது.கோவையில் இதுவரை அதிகபட்ச கொரோனா பாதிப்பு 394 பேர்.

 

இந்த நிலையில் கோவையில் இன்று ஒரே நாளில் இதுவரை அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதிய உச்சமான 395 ஐ அடைந்துள்ளது.

 

கோவையில் நேற்று வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2932 பேர்.இன்று ஒரே நாளில் 395 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,இன்று ஒரே நாளில் 258 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.3 பேர் உயிரிழந்துள்ளனர்.3066 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

மேலும்,இதுவரை கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 231 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon