--- --:--:-- --

தங்க கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு கொரொனா பாதிப்பு இல்லை..!

9

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் கடந்த ஐந்தாம் தேதி கைப்பற்றினர். இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஸ்வப்னா சுரேஷ் கருதப்பட்டார். இந்த நிலையில் சுரேஷ் தலைமறைவானார். அவர் மீது உபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

 

இதனை தொடர்ந்து சுரேசை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனவே ஸ்வப்னா முன்தினம் பெங்களூருவில் சிக்கினார். அவர்களை கைது செய்த அதிகாரிகள் கேரளா கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். எனவே அவர்களை கொச்சிக்கு கொண்டு சென்றனர்.

 

செல்லும் வழியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு கோர்ட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை முப்பதாம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.

 

இதைத்தொடர்ந்து இருவரும் பரிசோதனை மையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். எனவே ஸ்வப்னாவிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. எனவே, இன்று அவர்கள் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுகின்றனர். அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய என்‌ஐ‌ஏ அதிகாரிகளின் மனுவை உயர் நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.

Leave a Reply

Right Menu Icon