தங்கம் விலையில் மீண்டும் அதிரடி..!
பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கத்தின் விலை தற்போது ரூ.1 லட்சத்தை தாண்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இது சாமானிய மக்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,400க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று ( பிப்ரவரி 14) தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,560க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,16,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.12,450க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.99,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






