--- --:--:-- --

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

3

ங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் கணித்துள்ளது.

 

மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது. அதே நாளில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக் கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Right Menu Icon