இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர் மோடி – ராகுல் காந்தி கடும் தாக்கு
இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர் பிரதமர் மோடி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், “காரணமானவர்களை யாரையும் விடமாட்டோம்” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு பதிலளித்த ராகுல் காந்தி, நாட்டின் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்க அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், அதனை ஊக்குவித்தவரும் பிரதமர் மோடிதான் என குற்றம்சாட்டினார்.
மேலும், கல்வி அமைப்பு சீரழிவுக்கு காரணமானவர்களை பாதுகாத்தது மத்திய அரசே என்றும், அதன் பொறுப்பில் இருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது என்றும் அவர் விமர்சித்தார். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.






