--- --:--:-- --

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு..!

02

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. கூத்து பட்டறையில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விமல். ‘களவாணி’, ‘மஞ்சப்பை’ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்றவர்.

 

 

இந்த நிலையில், ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்த போது படத்தின் தயாரிப்புக்கு பைனான்சியர் கோபி என்பவரிடமிருந்து 4.5 கோடி கடனாக பெற்றார் நடிகர் விமல். அந்த தொகைக்கு விமல் காசோலை வழங்கினார். ஆனால், விமல் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து விமல் மீது செக் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை 11-வது வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

 

விசாரணையில் விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளது என அறிவித்த நீதிபதி ஆர்த்தி வாங்கிய தொகையை நடிகர் விமல் திரும்ப கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

 

அப்போது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என விமல் தரப்பு கோரிக்கை வைத்தது. அதனை ஏற்ற நீதிபதி மேல்முறையீடு செய்ய எதுவாக ஒரு மாதம் தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon