--- --:--:-- --

கண்டிப்பா அவரை மிஸ் பண்ணுவோம் – நடிகை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன்

8

மிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 

 

தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் தங்களின் ஏகோபித்த வரவேற்பை அளித்து வருகிறார்கள்.

 

 

இந்நிலையில், “`ஜனநாயகன்’ படத்தை நாங்கள் ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணினோம். படம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இதுதான் அவரோட கடைசி படம்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு. நாங்க கண்டிப்பா அவரை மிஸ் பண்ணுவோம்.” என்று நடிகை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon