உச்சத்தை தொட்ட தங்கம் விலை..!
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்துவரும் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், சாமானிய மக்களால் இனி தங்க நகையே வாங்க முடியாத என்ற சூழல் இருந்து வருகிறது.
புத்தாண்டு பிறந்த முதல் நாள் மட்டும் தங்கம் விலை குறைந்த நிலையில், தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. 19 நாட்களில் மட்டுமே 8 சதவீதம் வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து நேற்று ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை காலை மாலை என இரு வேளைகளிலும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
நேற்று மாலை நிலவரப்படி கடைசியாக 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கும், கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250க்கும், சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,890க்கும் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.340க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





