மீண்டும் தலைகீழாக குறைந்தது தங்கம் விலை..!
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.அந்த வகையில் நேற்று ஜூன் 9ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, இன்று ( ஜூன் 10) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.13,800க்கும் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 குறைந்து ஒரு கிராம் ரூ.11,570க்கும், சவரனுக்கு ரூ.2,800 குறைந்து ஒரு சவரன் ரூ.92,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






