அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,970க்கும் சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும் சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.100,400க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.





